சென்னை : வாஜிராம் & ரவி ஐஏஎஸ் பயிற்சி மைய இயக்குநர் ரவீந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “திரு.ரவீந்திரன் அவர்கள் தனது ஆழ்ந்த, அகன்ற அறிவால் எத்தனையோ சாதனையாளர்களை உருவாக்கியுள்ளார்; ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியவர்; அவரது மறைவு இளைஞர் சமுதாயத்துக்குப் பேரிழப்பு”இவ்வாறு தெரிவித்தார்.
