ஈரோடு, ஆக. 23: ஈரோடு மார்க்கெட்டில் ஆப்பிள் வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் செயல்படும் நேதாஜி தினசரி மார்கெட்டில் 50க்கும் மேற்பட்ட பழக்கடைகள், மண்டிகள் உள்ளன. இங்கு சீசனுக்கு தகுந்தவாறு பல்வேறு பழங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இமாச்சலபிரதேச மாநிலம், சிம்லா பகுதியில் ஆப்பிள் அறுவடை சீசன் துவங்கியுள்ள காரணத்தால், ஈரோடு மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால், சிம்லா ஆப்பிள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
