- பாஜக
- விஜய்
- நெல்லை
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமித் ஷா
நெல்லை: பாஜ மாநில தலைவா் நயினார் நாகேந்திரன்: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. அரசியலில் சிலர் கவர்ச்சியின் மூலம் கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அமித்ஷாவின் தேர்தல் வியூகம் மூலம் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்.
பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை: விஜய் மாநாட்டுக்கு மக்கள் வரலாம், ரேம்ப்வாக் வரும்போது கை தட்டலாம். ஆனால் வாக்களிக்கும் போது மக்கள் யோசிப்பார்கள். இவர் ஐந்தாண்டுகள் அரசியலில் தாக்குபிடிப்பாரா? என்று பார்ப்பார்கள். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஒரு மாதிரியும் அரசியலுக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் பேசுகிறார். வார்த்தைகளை பொது இடத்தில் பயன்படுத்தும் போது பக்குவமாக பேச வேண்டும்.
பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப்போகிறது. அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார். விஜய்க்கு வசனம் எழுதிக் கொடுத்தவர், அங்கிள், மிஸ்டர் பிஎம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். அதை தான் அவர் படித்து உள்ளார். பாஜ கூட்டணி பொருந்தா கூட்டணியா, பொருந்துகிற கூட்டணியா எனஅவருக்கு என்ன தெரியும். அவர் அரசியல் ஞானம் பெறவில்லை என்பதற்கு கச்சத்தீவை பற்றி பேசியதே உதாரணம். மாநாட்டில் கொடியை ஒழுங்காக நட முடியவில்லை. மாநாட்டை ஒழுங்காக நடத்த முடியாதவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
