- ஸ்வராஜ் பால்
- பிரதமர் மோடி
- லண்டன்
- பஞ்சாப்
- ஜலந்தர் உயர்நிலைப் பள்ளி
- பஞ்சாப் பல்கலைக்கழகம்
- ஐக்கிய மாநிலங்கள்
- இந்தியா
- இங்கிலாந்து
லண்டன்: பஞ்சாபில் 1931ம் ஆண்டு பிறந்தவர் ஸ்வராஜ் பால். இவர் ஜலந்தர் உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பெற்றார். பின்னர் அமெரிக்காவில் மேல்படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். 1966ம் ஆண்டு தனது மகளின் சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு துரதிஷ்டவசமாக அவரது நான்கு வயது மகள் இறந்துவிட்டார். பின்னர் மகள் அம்பிகா பாலின் நினைவாக அறக்கட்டளையை தொடங்கினார். லண்டனில் உள்ள அம்பிகா பால் குழந்தைகள் மிருககாட்சி சாலை இந்த அறக்கட்டளையின் முக்கிய பயனாளிகளில் ஒன்றாகும்.
இங்கிலாந்தை தளமாக கொண்ட கபாரோ தொழில்துறை குழுமத்தை நிறுவினார். 94வயதாகும் ஸ்வராஜ் பால் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவுக்கு பிரதமர் மோடி மிகுந்த வேதனையை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில்,‘‘ஸ்வராஜ் பால் ஜீயின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
