×

வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்

திருச்சி, டிச.10: திருச்சி கன்டோன்மென்ட் போக்குவரத்து கழக புறநகர் கிளை வளாகத்தில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் அனைத்து சங்க மாநில நிர்வாகிகள் சார்பில் நடந்தது. இதில் தொமுச பொதுச்செயலாளர் குணசேகரன் உள்பட எல்பிஎப், சிஐடியூ, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, டிடிஎஸ்எப், எம்எல்எப் உள்ளிட்ட கூட்டு குழு சங்கத்தினர் பங்கேற்றனர். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை பாதுகாத்திட நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன்கள் மற்றும் நிலுவைகளை உடனே வழங்கிட வேண்டும். 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரையும் பென்சன் திட்டத்தில் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Strike briefing ,
× RELATED மழை நீர் உயிர் நீர் பற்றாக்குறையை போக்க மழைநீரை சேமிப்போம்!