×

வி.களத்தூர் ஊராட்சி மன்றத்தில் கான்கிரீட் கட்டிடத்தில் கசியும் மழைநீர்

பெரம்பலூர், டிச.10:இப்ப விழுமோ எப்ப விழுமோ கான்கிரீட் கட்டிடத்தில் கசியும் மழைநீரை பக்கெட்டில் சேமித்து வெளியேற்றும் அவலம். வி.களத்தூர் ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு விமோசனம் கிட்டுமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ளது வி.களத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கான அலுவலக கட்டிடம், கல்லாற்றின் தென்கரையில் சாலையோரம் உள்ளது. கடந்த 35ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டிடம் தற்போது சிதிலமடைந்துள்ளது. இதனால் கான்கிரீட் கட்டிட த்தின் உட்புற சீலிங் பகுதியில் கான்கிரீட் ஏடு ஏடாய் பெயர்ந்து எலும்புக் கூடாக கம்பிகள் தெரிகின்றன. உட்புற சீலிங் கொட்டியதால் கொட்டும் மழைநீர் கட்டிடத்தின் நடுவே சொட்டு சொட்டாக கொட்டிவருகின்றன. இதனால் மழை நேரங்களில் தரைப்பகுதி எப்போதும் ஈரமாக வழுக்கி விழச்செய்யும் நிலையில் தான் இருக்கிறது. மேலும் கொட்டும் மழைநீரை துப்பு ரவுப் பணியாளர்கள் பக்கெட், பாத்திரங்களில் பிடித்து வெளியேற்றும் அவல நிலை உள்ளது. தொடர் கசிவால் கட்டிடம் இடிந்து இப்ப விழுமோ...எப்பவிழுமோ... என்ற அபாய நிலையில்தான் உள்ளது.

தொகுப்புவீடு கட்டுவதற்கு பயனாளிகளிடம் தலா ரூ.15 ஆயிரம் வரை கறாராகப் வசூலித்த ஊராட்சி மன்ற பெண் செயலாளர் சில மாதங்களுக்கு முன் எறையூர் ஊராட்சிக்கு மாற்றலாகி சென்றபோதும் லஞ்சம் வாங்கியது அம்பலமானதால் சஸ்பெண்ட் செ ய்யப்பட்ட நிலையில், ஊராட்சிமன்ற கட்டிடம் மட்டும் ஒழுகிக் கொண்டிருப்பது உள்ளூர் மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இதுகுறித்து புதிய ஊராட்சி மன்றத் தலைவர் பிரபுவிடம் கேட்டபோது தெரிவித்ததாவது :
வி களத்தூர் ஊராட்சி மன் றக் கட்டிடம் 35 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கட் டிடத்திற்கு மாற்றாக வேறு அரசு புறம்போக்கு நிலத்தி ல் ஊராட்சி மன்ற அலுவல கம் கட்டுவதற்கு இடம் தே ர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வருவாய்த்து றை அதற்கான இடத்தை ஒதுக்கித் தராமல் தாமதம் செய்வதால் சொந்தக் கட்டிடம் கட்ட முடியாமல் உ ள்ளது. இருக்கும் இடத்தி லேயே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு, 2015ல் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அரசாணையின்படி, நீர்நிலை புறம்போக்கில் புதிய கட்டிடம் கட்டிட வாய்ப்பில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சொந்தக் கட்டி டம்கட்ட நிலம் வழங்க வரு வாய்த்துறைமூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags : building ,
× RELATED சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 5 மாடி...