×

எம்.ஜி.ஆர்.நகரில் பரபரப்பு ஓரினச்சேர்க்கைக்கு ஆசைப்பட்டு 14 சவரன் நகையை இழந்த புரோகிதர்: பைக் – டாக்சி டிரைவரை கைது செய்து போலீஸ் விசாரணை

 

சென்னை: எம்.ஜி.ஆர். நகரில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட புரோகிதரிடம் 14 சவரன் நகையை பறித்து சென்ற பைக் – டாக்சி டிரைவரை ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு(61)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புரோகிதராக பணியாற்றி வருகிறார். ராமுவுக்கு திருணமாகி குடும்பங்கள் உள்ளது. இந்நிலையில் ராமுஓரினச்சேர்க்கையில் அதிக நாட்டமாக இருந்து வந்துள்ளார்.

ராமு புரோகிதர் பணிக்கு வெளியே செல்லும் போது, பைக் டாக்சி மூலம் செல்வது வழக்கம். அந்த வகையில் ஆன்லைன் நிறுவனத்தில் பைக் டாக்சி ஓட்டி வரும் டேவிட் இளவரசன்(21) என்பவருடன் அடிக்கடி புரோகிதர் ராமு சென்று வந்துள்ளார். அந்த வகையில் டேவிட் இளவரசனுடன் புரோகிதர் ராமுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் காரணமாக இருவரும் அடிக்கடி தனியாக அறை எடுத்து தங்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதற்காக புரோகிதர் ராமு ஒரு முறைக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் புரோகிதர் வீட்டில் இருந்தவர்கள் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளனர். வீட்டில் புரோகிதர் ராமு மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனால் வழக்கமாக தனது பைக் டாக்சி நண்பரான டேவிட் இளவரசனை தனது வீட்டிற்கு புரோகிதர் அழைத்துள்ளார். அதன்படி டேவிட் இளவரசன் தனது நண்பர் ஒருவருடன் புரோகிதர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பிறகு இருவருடன் புரோகிதர் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார்.

பின்னர் பேசியபடி பணத்தை புரோகிதர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டேவிட் இளவரசன் தனக்கு ரூ.5 ஆயிரமும், நண்பனுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் 10 ஆயிரம் தர வேண்டும் என்று தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது டேவிட் இளவரசன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் புரோகிதரை மிரட்டி, ‘நீ ஓரினச்சேரிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்துவிடுவோம்’ என்று மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 சவரன் செயின் மற்றும் கையில் அணிந்து இருந்த 4 சவரன் மதிப்புள்ள 3 மோதிரங்கள் என மொத்தம் 14 சவரன் நகைகளை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத புரோகிதர், என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்தார். பிறகு வீட்டிற்கு வந்த தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார். அதை தொடர்ந்து புரோகிதர் ராமு சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் புரோகிதரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த டேவிட் இளவரசனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும், புரோகிதரிடம் பறித்த 14 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புரோகிதர் ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத போது ஓரினச்சேரிக்கையில் ஈடுபட்டு 14 சவரன் தங்க நகைகளை இழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : M. G. R. Prodigy ,Chennai ,M. G. R. ,M. G. R. Ramu ,Nagar ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது