×

முத்துப்பேட்டை அருகே ஓவரூரில் விபத்தை ஏற்படுத்தும் பெயர்த்த சாலை கழிவுகள்

முத்துப்பேட்டை,ஆக.21: முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓவரூர் பேருந்து நிறுத்தத்ததில் சாலை ஓர துகள்களால் விபத்து ஏற்படுகிறது. இதை உடனடியாக சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கோட்டகம் ஓவரூர் பேரூந்து நிறுத்தம் என்பது கிழக்கு கடற்கரை சாலை முத்துப்பேட்டை – திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயிகள், தொலைதூரம் பயணங்கள் மேற்கொள்ள சென்று வருகின்றனர்.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேரூந்து நிறுத்தத்தில் அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சீரமைப்பு செய்யும் பணியில் பெயர்த்து எடுக்கப்பட்ட சாலை துகள்களை இந்த இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக கொட்டப்பட்ட இந்த துகள்கள் முறையாக பரப்பி சமப்படுத்தி சரி செய்யாததால் தற்போது பேரூந்து ஏறவரும் மக்களும் இறங்க வரும் மக்களும் தினந்தோறும் கால் தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டு குறிப்பாக முதியோர்கள் பெண்கள் சிறுவர்கள் அதிகளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே இங்கு வரும் மக்கள் நலன் கருதி இந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனத்தில்கொண்டு இங்கு கொட்டப்பட்ட சாலை துகள்களை சரி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Overur ,Muthupettai ,East Coast Road ,Thiruvarur district ,Pandi Kottagam Overur ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்