திருமலை: ஆந்திராவில் (பி4) என்ற தங்க குடும்பம் எனும் திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை தத்தெடுத்து அந்த குடும்பத்தினர் பொருளாதாரத்தில் மேம்பட தேவையான உதவியை செய்யும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்று முன்தினம் தொடங்கி வைத்து பேசுகையில், ‘ஒரு கார்ப்பரேட் நிறுவன தொழிலதிபர் தனது நிறுவனத்தின் சில ஷேர்களை விற்பனை செய்தார். அதில் ரூ.6000 கோடி லாபம் கிடைத்ததில் ரூ.140 கோடி மதிப்புள்ள 121 கிலோ தங்க நகைகளை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார். ஏழுமலையான் ஒரு நாளைக்கு தினந்தோறும் 120 கிலோ தங்க ஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதே எடைக்கு நிகராக பக்தர் ஒருவர் தனது தொழிலில் தனக்கு கிடைத்த லாபத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். ஆனால் தனது பெயரை மட்டும் தெரிவிக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார்’ என்றார்.
