×

நீதித்துறையை விமர்சித்த புகார்: சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:நீதித்துறையை விமர்சித்த புகாரில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் பேச்சு குறித்து வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் அளித்த புகாரில் வழக்குபதிய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,

நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசிய சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிடப் பட்டது. நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தை பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

 

Tags : Madras High Court ,Seeman ,Chennai ,Egmore Court ,Charles Alexander ,
× RELATED 2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க...