×

சிக்கண்ணா கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு விவாத கருத்தரங்கு

திருப்பூர், ஆக.20: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம் சார்பாக பாலின உளவியல் கருத்தரங்க விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  மாணவர்களை இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு பாலின சமத்துவத்திற்கு தேவையானது அரசின் சட்டங்களா? தனிமனித திட்டங்களா? என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேற்கண்ட தலைப்புகளில் காரசாரமான விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை நூலகர் சித்ரா தவப்புதல்வி ஒருங்கிணைத்தார். வணிகவியல் துறைத்தலைவர் அமிர்தராணி வரவேற்புரையாற்றினார். இறுதியாக பேராசிரியர் பர்வீன் பானு நன்றியுரை கூறினார்.

 

Tags : Gender Psychology Monitoring and Discussion ,Chikanna College ,Tiruppur ,Gender Psychology ,Gender Psychology Monitoring and Awareness Forum ,Chikanna Government Arts College ,Tiruppur College Road ,
× RELATED வரி செலுத்தாத 11 கடைகளுக்கு ‘சீல்’ உடுமலை நகராட்சி ஆணையர் அதிரடி