காங்கயம், ஆக. 20: மாரி செல்வராஜ் இயக்கிய ‘வாழை’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இதில் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுத்திருந்தார். அதில் வாழை ஏற்றிய லாரி கவிழ்ந்து அவரது சகோதரி உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நினைவு படுத்தும் விதமாகதிருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் லோடு ஏற்றி செல்லும் லாரி, ஈச்சர் வேன்களின் மீது பணியாட்களை அமர வைத்து வெகு தூரம் அழைத்துச்செல்கிறார்கள்.
திடீரென பிரேக் போடும் போதும், வேகத்தடையின் மீது அதிவேகமாக ஏறி இறங்கும் போது கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது தவிர மின் கம்பிகள் மீதும் மோதும் நிலை உள்ளது. பணியாட்களுக்கு உரிய வாகன வசதி செய்து தரவேண்டும். இதுபோன்று விதி மீறலில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
