×

நல்லாசிரியர் விருதுக்கு 22 ஆசிரியர்கள் தேர்வு

ஈரோடு, ஆக. 20: ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 22 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடப்பாண்டுக்கான ஈரோடு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளின் ஆசிரியை, ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலமாக தொடக்கப்பள்ளிகளில் 10, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 10, தனியார் பள்ளிகளில் 2 பேர் என மொத்தம் 22 ஆசிரியர்களை தேர்வு செய்து, மாநில நல்லாசிரியர் விருதுக்கு சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 7 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 3 ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தேர்வு செய்து, பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. மாநில குழு அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வரும் தேர்வு செய்யப்பட்டவர்களை பரிசீலனை செய்து, டெல்லிக்கு அனுப்பி வைக்கும். அங்கு ஒன்றிய குழு ஆய்வுக்கு பின் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags : Erode ,Tamil Nadu Government ,
× RELATED பைக் திருடிய வாலிபர் கைது