×

வாலிபரை தாக்கிய ரவுடி கைது

திருச்சி, ஆக.20: திருச்சியில் வாலிபரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, பெரிய கடை வீதி சின்ன சவுக் பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் (38). இவர் கடந்த 17ம் தேதி தேவதானம் டாஸ்மாக் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த 2 பெண்கள் நிலைத்தடுமாறி விழுந்தனர், இதைப் பார்த்த ஆரிப் அவர்களுக்கு உதவ சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் தகராறில் ஈடுபட்டு, பாட்டிலால் அவரது தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்றார். காயமடைந்த ஆரிப் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கீழ தேவதானத்தைச் சேர்ந்த அருண் பிரசாத் (38) என்ற ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : Rowdy ,Trichy ,Arif ,Chinna Chowk ,Periya Kadai Road, Trichy ,Devadanam TASMAC ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...