- உச்ச நீதிமன்றம்
- ஒன்றிய தடய அறிவியல் துறை
- மணிப்பூர்
- புது தில்லி
- முதல் அமைச்சர்
- பிரணாப் சிங்
- சஞ்சய்குமார்
- சதீஷ் சந்திர சர்மா
புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையை முன்னாள் முதல்வர் பிரேன்சிங் தூண்டி விட்டதாக கூறப்படும் ஆடியோ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரேன்சிங் ஆடியோ ஆய்வு தொடர்பாக ஒன்றிய தடயவியல் அறிவியல் ஆய்வகம் சமர்ப்பித்த நடவடிக்கை அறிக்கையால் உச்ச நீதிமன்ற கடும் அதிருப்தி அடைந்தது.
இதுதொடர்பாக நீதிபதிகள் கூறும்போது,’ தடயவியல் சோதனைகள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரே நபர் தான் பேசுகிறார்கள் என்பதை அடையாளம் காண முடியுமா என்பதுதான் எங்கள் கேள்வி. ஆனால் எங்களுக்கு வெறும் ஏளனமான பதில்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று கண்டனம் தெரிவித்தனர்.
