×

துணிக்கடை உரிமையாளர் கொலை வழக்கு போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு ஆயுள்

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்துபவர்  முரளிபாபு(45). இவருக்கும் அதே பகுதியில் துணி எக்ஸ்போர்ட் உரிமையாளர் செங்கல்வராயன்(60). இருவருக்கும்  பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. செங்கல்வராயன், அடிக்கடி  முரளிபாபுவின் கடைக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அங்கிருந்த பாரதி என்ற பெண்ணுடன் செங்கல்வராயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. முரளிபாபு ஏற்கனவே பாரதியுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், செங்கல்வராயனுக்கு பாரதி மேல் ஆசை வந்தது. எனவே   பண ஆசையை காட்டி முரளிபாபுவுக்கு தெரியாமல் செங்கல்வராயன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால் செங்கல்வராயன், முரளிபாபு இருவருக்கும் அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. செங்கல்வராயன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க முரளிபாபுவின் கடைக்கு வந்துள்ளார்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த முரளிபாபு, அவரை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில்  சடலத்தை போட்டார் பாதிரிவேடு  போலீசார் வழக்குப்பதிவு செய்து  முரளிபாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி விஜயராணி இந்த வழக்கை விசாரித்து  முரளி பாபுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : clothing store owner murder case photo studio owner ,
× RELATED துணிக்கடை உரிமையாளர் கொலை வழக்கு போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு ஆயுள்