×

துணை ஜனாதிபதியாக வருவதற்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மதிமுக சார்பில் வாழ்த்து: கோவையில் வைகோ பேட்டி

 

கோவை: துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் வருவதற்கு மதிமுக சார்பில் வாழ்த்துவதாக வைகோ கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. வீரமும், விருந்தோம்பலும் நிறைந்த கொங்கு மண்டலத்தில் இருந்து துணை ஜனாதிபதியாக அவர் வருவதற்கு மதிமுக சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் அவர் ஜனாதிபதி ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது. கட்சி சார்பற்று அனைவரையும் மதிக்கும் தன்மை உடையவர். அவர் நண்பர் என்ற முறையில் வாழ்த்து தெரிவிக்கிறேன். என்னுடைய மன முடிவை கூறியுள்ளேன். இந்திய கூட்டணி சார்பில் வேட்பாளர் யார்? என்று தெரியவில்லை. திமுக தலைவர் அறிவிக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை மதிமுக பின்பற்றும். பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட மோசடி நடந்தது இல்லை. நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : MDMK ,C.P. Radhakrishnan ,Vice President ,Vaiko ,Coimbatore ,General Secretary ,Coimbatore airport ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...