வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோவில்தாவு கிராமத்தை சேர்ந்தவர் குமார்(35). ஜேசிபி உரிமையாளரான இவர், மணல் விற்பனை செய்து வந்தார். இவருக்கும் கைலவணம்பேட்டையை சேர்ந்த இமானுவேல்(30) என்பவருக்கும், மணல் அள்ளி விற்பதில் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இதனால் குமாரை வீடு அருகே வரவழைத்து மண்வெட்டியால் வெட்டி நேற்றுமுன்தினம் இரவு கொலை செய்துள்ளார். நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தகவலின்படி வேதாரண்யம் போலீசார் சென்று விசாரணை நடத்தி, இமானுவேலை கைது செய்தனர்.
