திருமலை: தெலங்கானா மாநிலம் கோடங்கல்- நாராயண்பேட்டை மாவட்டம் கோஸ்கி நகரை சேர்ந்தவர் மொகுலையா(28). இவர் நேற்று காலை பேருந்து நிலையம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்த டிப்பர் லாரி பைக் மீது வேகமாக மோதியதில் மொகுலையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அங்கு ஆம்புலன்ஸ் இல்லாததைக் கண்டறிந்தனர். இதனால் மொகுலையாவின் சடலத்தை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு எலுமிச்சை பழம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவரின் தள்ளுவண்டியில் மொகுலையா சடலத்தை வைத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தள்ளுவண்டியில் போலீசார் சடலத்தை எடுத்துச்செல்வதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வைரலாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
