புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பிரமோத் குமார் ஐபிஎஸ் மனு ஒன்றை தாக்கல்.செய்திருந்தார். அதில், தமிழ்நாடு டிஜிபி பதவிக்கு தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. வரும் செப்டம்பர் மாதத்துடன் நான் ஓய்வு பெற இருப்பதால் தனது பெயர் பரிசீலணையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்சம் ஆறு மாதம் பதவி காலம் இருந்தால் தான் டிஜிபி பதவிக்கு பரிந்துரைக்க முடியும் என்ற விதிமுறையில் தளர்வுகளை மேற்கொண்டு தனது பெயரையும் பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். விசாரணைக்கு எற்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் , தமிழ்நாடு அரசு வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.
