- தேர்தல் ஆணையம்
- காங்கிரஸ்
- கயாஜி
- காங்கிரஸ் கட்சி
- பவன் க்ஹீரா
- கான்ஹையா குமார்
- தாபூர்
- கயாஜி மாவட்டம்
- பீகார்
- ராகுல் காந்தி
- இந்தியா
காயாஜி: பீகார் மாநிலம் காயாஜி மாவட்டத்தில் தாபூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் விளம்பர மற்றும் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா மற்றும் கன்னையாகுமார் அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி யாத்திரை தொடங்கியவுடன், இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டியிருந்தது. அதன்பிறகு தான் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் இருப்பதை நாங்கள் அறிந்தோம். இல்லை என்றால் அனுராக் தாக்கூர், ஒரு சம்பித் பத்ரா அல்லது வேறு யாராவது ஒருவர் கருத்து தெரிவிப்பார் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் இறுதியாக நாங்கள் தலைமை தேர்தல் ஆணையரை பார்த்தோம். அவர் (ஞானேஷ் குமார்) ஒரு பிரமாணப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தியை மிரட்டினார்.
தலைமை தேர்தல் ஆணையர் வேண்டுமானால் அச்சுறுத்தல்களுக்கு பயப்படுவார். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். அவர்கள் தங்கள் சொந்த தரவுகளை நம்புவதில்ல. இப்போது வாக்காளர் பட்டியலில் ஏதோ தவறு இருப்பதாக தேர்தல் ஆணையமே கூறுகிறது. அதற்கு முன்பு நாங்கள் கூறியதை பொய் என்றார்கள். ராகுல் காந்தி வாக்குப் பட்டியலில் உள்ள முறைகேடுகளுக்கு ஆதாரம் அளித்தபோது, தேர்தல் ஆணையம் அவரை ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யச் சொன்னது. இது பாஜ செய்தித் தொடர்பாளர் பேசுவது போல் தோன்றியது. மேலும் ராகுல்காந்தி புகாருக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே வாக்காளர் பட்டியல் சுத்தமானது என்று தேர்வு ஆணையம் பிரமாணப் பத்திரம் கொடுத்தால், ராகுல்காந்தி தரப்பில் நாங்களும் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பதாக ஒரு பிரமாணப் பத்திரம் கொடுப்போம். இவ்வாறு தெரிவித்தனர்.
