- ஊக்கத்தொகை பரிசு
- பாபநாசம் நகர செங்குந்தர் நல சங்கம்
- தஞ்சாவூர்
- ஆண்டு கல்வி ஊக்கத்தொகை பரிசு வழங்கும் விழா
- தஞ்சாவூர் மாவட்டம்
- செங்குந்தர்
- மகாஜன சங்கம்
- கபிஸ்தலம்
- பாபநாசம் சங்கம்
- ஜனாதிபதி
- கலைமணி
தஞ்சாவூர், ஆக.18: பாபநாசம் நகர செங்குந்தர் நல சங்கம் தஞ்சை மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம் இணைந்து நடத்தும் 18ம் ஆண்டு கல்வி ஊக்க பரிசளிப்பு விழா கபிஸ்தலம் பகுதியில் நடைபெற்றது. பாபநாசம் சங்கத் தலைவர் கலைமணி தலைமை தாங்கி வரவேற்று பேசினார். மூத்தோர் அணி செயலாளர் இளங்கோவன், சங்க செயலாளர் சரவணன், துணைத் தலைவர் மணி, செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் செல்வராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் சிவா, முன்னாள் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் நந்தகோபால், மாநில பொருளாளர் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்கி பேசினார். முடிவில் பாபநாசம் நகர செங்குந்தர் நல சங்கத்தின் பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

