×

அவிநாசி பழனியப்பா பள்ளியில் சுதந்திர தினவிழா கோலாகலம்

 

அவிநாசி, ஆக.18: அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் கலந்து கொண்டு கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். சிசாரணர் மற்றும் வழிகாட்டி மாணவர்கள் மற்றும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அணிகளின் சிறப்பான அணிவகுப்புடன் பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பழனியப்பா பள்ளியின் தாளாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்து வீர சிவாஜியின் சிலையை பரிசளித்தார்.

பள்ளி செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார், பள்ளி இயக்குனர் மருத்துவர் பிரகாஷ், கல்வி இயக்குனர் மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர்கள் அபிநயா பிரகாஷ் மற்றும் நிவேதா சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியை பழனியப்பா பள்ளியின் முதல்வர் வித்யா சங்கர் மற்றும் பள்ளியின் ஆலோசகர் உமாமகேஸ்வரி, மழலையர் பள்ளி முதல்வர் யசோதை மனோகர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.மாணவ -மாணவிகளின் பரதநாட்டியம், பேச்சு, தேசபக்தி பாடல், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட குழந்தைகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

Tags : Independence Day ,Kolalakalam ,Avinasi Palaniappa School Avinasi ,Avinasi Palaniappa International Senior Secondary School ,Manipur ,Meghalaya ,Shanmuganathan ,
× RELATED வரி செலுத்தாத 11 கடைகளுக்கு ‘சீல்’ உடுமலை நகராட்சி ஆணையர் அதிரடி