×

மணல் தட்டுப்பாட்டால் சுமார் ரூ.1000 கோடி இழப்பு; பட்டா நிலத்தில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மணல் குவாரிகள் கடந்த 22 மாதங்களாக இயங்கவில்லை. கட்டுமான தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 90 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் கடந்த 22 மாதமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3000 லோடு மணல் தேவைப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலுக்கு சுமார் 9000 லோடு மணலும் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் மணல் கிடைக்காத காரணத்தால் எம்சாண்ட், பூளு மெட்டல்ஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பட்டா நிலங்களில் மணல் குவாரிகளின் இயக்கம் குறைந்த காரணத்தால் சிமெண்ட் விலை, ஸ்டீல் விலையும் ஏற்பட்டுள்ளதால் கட்டுமான நிறுவனங்கள், மணல் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 22 மாதமாக சுமார் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பட்டா நிலங்களில் மணல் குவாரிகள் திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகம் முழுவது 90 லட்சம் கட்டுமான தொழிலாளர், 75000 மணல் லாரி உரிமையாளர்களை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Lorry ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Sand Lorry Owners Association ,President ,R. Munirathnam ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்...