சென்னை: பட்டியலின ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களில் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த முதல்வருக்கு திமுக மாணவர் அணி பாராட்டு தெரிவித்துள்ளது. திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக சாதியவாதிகளால் அத்துமீறி மறுக்கப்பட்டு வந்த பட்டியல் இனச் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களில் தேசிய கொடியேற்றும் உரிமையை இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் முழுமையாக தனிக்கவனம் செலுத்தி அனைவரையும் கொடியேற்ற வைத்திருக்கிறார் தமிழர் தலைவர் தாயுமானவர் மு.க.ஸ்டாலின். சாதி என்பது மனநோயாகவும் பெருமிதமாகவும் புரையோடி கிடக்கிறது, நமது சமூகத்தில் சாதியத்திற்கு எதிராக திராவிடமாடல் அரசு செய்த சமூக புரட்சி இது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
