×

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பரவலான மழை பெய்து வருகிறது. வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில், மணிக்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 18ம் தேதி வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, நீலகிரி, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,North Tamil Nadu ,South Tamil Nadu ,Puduwa ,Karaikal ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...