தஞ்சாவூர், ஆக.15: தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் சுதந்திர தின நாளான இன்று மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

