×

ஆயர்வேத மருத்துவர் ஆபரஷேன் செய்யலாம் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மருத்துவர்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி, டிச. 9:  மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி அறிவிப்பு ஒன்றை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி வரும் காலங்களில் ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்பதே. இதற்கு நாடு முழுவதும் உள்ள அலோபதி மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  நிதியோக் அமைப்பு, நான்கு குழுக்களை அமைத்துள்ளது. மருத்துவக் கல்வி, பொதுமக்களுக்கான சுகாதார முறை, மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகிய அனைத்து மருத்துவ துறைகளையும் ஒரே கலவையாக 2030ல் கொண்டு வர அமைத்துள்ளது. இது பொதுமக்களை பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக பள்ளிக் கல்வியிலும், மருத்துவ படிப்பிலும் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. இதற்கும் மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் உத்தரவை வாபஸ் பெறக்கோரி கலெக்டரிட் மனு அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட மருத்துவர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து இது தொடர்பான மனு ஒன்றை அளித்தனர். அதில், மத்திய அரசின் மருத்துவத்துறைக்கு எதிரான உத்தரவினை கண்டித்து வரும் 11ம் தேதி காலை 6 மணி மாலை 6 மணி வரை அவசர சிசிச்சைகள் தவிர மருத்துவமனைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Physician ,Collector of Physicians ,Central Government ,
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...