- பரீட்சைத் துறை
- சென்னை
- அரசு தேர்வுகள் இயக்குநரகம்
- பள்ளி கல்வித் துறை
- லதா
- பள்ளி
- அரசாங்க பரீட்சைகள்
- மாநில கல்வித் துறை
சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் மற்றும் அதற்கு நிகரான பணியிடமான அரசுத் தேர்வுகள் இயக்குநர் பணியிடத்தில் பணியாற்றிவரும் இயக்குநர் லதாவுக்கு நிர்வாக நலன் கருதி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் பணியிடத்தில் மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.
அவருக்கு பதிலாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரான சசிகலா தேர்வுத்துறை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். மேலும், தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநர் சுகன்யா, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இதற்கான ஆணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ளார்.
