×

பிரதான குழாய் இணைக்கும் பணி 5 மண்டலங்களில் 18ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் தகவல்

சென்னை: பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், 5 மண்டலங்களில் வரும் 18ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது, என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அண்ணாநகர் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்கிறது. இதனால் வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் 19ம் தேதி காலை 8 மணி வரை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் < https://cmwssb.tn.gov.in > என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Chennai Drinking Water Board ,Annanagar ,Purasaivakkam Highway… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...