×

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகழாரம் சமாஜ்வாடி பெண் எம்எல்ஏ நீக்கம்: அகிலேஷ் அதிரடி

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பேசிய சமாஜ்வாடி பெண் எம்எல்ஏ பூஜா பால், ‘‘2005ம் ஆண்டு பிரயாக்ராஜில் ஆதிக் அகமதுவுடன் தொடர்புடைய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது கணவரும் முன்னாள் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவுமான ராஜூ பால் கொலை வழக்கில் நீதியை உறுதி செய்ததற்காக முதல்வர் ஆதித்யநாத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஆதித்யநாத் சிறப்பாக செயல்படுவதால் தான் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது” என்று கூறினார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags : Chief Minister ,Yogi Adityanath ,Samajwadi Party ,MLA ,Akhilesh ,Lucknow ,Uttar Pradesh Assembly ,Pooja Pal ,Bahujan Samaj Party ,Raju Pal ,Prayagraj ,Adhik Ahmed… ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...