×

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி துவங்கியது: ஐகோர்ட் கிளையில் அரசு பதில்

மதுரை: புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி துவங்கியது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பு வாதத்தை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்தது. புதிய டிஜிபிக்கான நியமன நடைமுறையை தொடங்க கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த யாசர் அராபத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் புதிய டிஜிபி நியமன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Tags : DGP ,Madurai ,Ajmal Khan ,High Court ,Tamil Nadu government ,DGP… ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...