சென்னை: தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகி உள்ளார். சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு அமைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இருந்து நீதிபதி கே.வி.விஸ்வநாதன் விலகினார். சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் ஏற்கனெவே வழக்கறிஞராக ஆஜராகி உள்ளதால் நீதிபதி விலகினார்.
