டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு மகள் சாவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரம்பலூர், டிச. 8: பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையத்தை சேர்ந்த குமார் தனது குடும்பத்துடன் வந்து மனு அளித்தார். அதில் எனது மகள் பிரேமாவும் (25), அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (28) என்பவரும் காதலித்து 2016ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தியாஸ் ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களில் இருந்தே சுரேஷ், தனது பெற்றோர் பாலு, பொன்னம்மாள் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தாராம். இதுதொடர்பாக கிராம முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் சுரேஷ் நாள்தோறும் மது அருந்தி விட்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு தகாத வார்த்தையால் திட்டி தாக்கினாராம்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி சுரேஷ் தனது பெற்றோருடன் சேர்ந்து சித்ரவதை செய்ததால் செப்டம்பர் 1ம் தேதி பிரேமா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுரேஷ் மது அரு ந்திவிட்டு எங்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக எஸ்பியிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மகளின் தற்கொலைக்கு காரணமானோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>