×

வடகால் கிராமத்தில் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

கொள்ளிடம், டிச.7: கொள்ளிடம் அருகே வடகால் கிராமம் செல்வவிநாயகர் கோயிலில் பட்டப்பகலில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடகால் கிராமம் அரண்மனை தெருவில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சீர்காழியை சேர்ந்த வைத்தியநாத சாமி என்பவர் அர்ச்சகராக உள்ளார். தினந்தோறும் பகல் 11 மணி அளவில் பூஜை செய்துவிட்டு ஊருக்கு திரும்பி விடுவார். இந்நிலையில் நேற்று 11 மணிக்கு அர்ச்சகர் வைத்தியநாத சாமி கோயிலுக்கு வந்து வழக்கம்போல் பூஜை நடத்தி விட்டு 12 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று பகல் 2 மணி அளவில் கோயிலின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு கோயில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கோயில் அறங்காவலர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறங்காவலர் மணிவண்ணன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : theft ,temple ,village ,Vadakal ,
× RELATED காட்டுமன்னார் கோயில் அருகே...