×

அனைத்து ஊராட்சிகளிலும் ஆக.15ல் கிராம சபை கூட்டம்

திண்டுக்கல், ஆக. 13: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று ஆக.15ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Gram Sabha ,Dindigul ,Collector ,Saravanan ,Dindigul district ,Independence Day ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்