தஞ்சாவூர், ஆக 13: சுதந்திரதினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே, இக்கிராமசபை கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்களை வலியுறுத்தவேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

