×

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு

நாகப்பட்டினம், ஆக.13: டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் டிஎன்சிஎஸ்சி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மகேந்திரன், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில இணை பொதுச்செயலாளர்கள் குணசேகரன், ராஜ்மோகன், மாநில துணைத்தலைவர்கள் கோதண்டபாணி, சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, சுமைப்பணிகளை டெண்டர் விடுவதை கைவிட வேண்டும். நிரத்தரம் செய்ய தகுதியுள்ளோர் பட்டியலில் உள்ள கொள்முதல் பணியாளர்களை காலம் தாழ்த்தாமல் நிரத்தரம் செய்ய வேண்டும். கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 60 வயது வரம்பை ரத்து செய்து வலு உள்ளவரை மூட்டை தூக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறு த்தி முழக்கங்கள் எழுப்பபட்டன.

 

Tags : Nagapattinam ,TNCSC ,Senior ,Manager ,TNCSC Heavy Lifting Workers' Union ,District Secretary ,Anandan ,AITUC ,District ,Mahendran ,Heavy Lifting Workers' Union… ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்