- திருப்பதி
- சாலை
- தேவஸ்தானங்கள்
- திருமலா
- திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள்
- சிவன்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதிலும் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை கார்களிலும் திருப்பதிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் அலிபிரி சோதனைச் சாவடியில், சோதனை செய்யப்பட்டு சுங்க கட்டணம் செலுத்திய பின்னர் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் இந்நாள் வரை பணம் செலுத்தி திருமலைக்கு செல்வதற்கான டோக்கன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்களுக்கு சிறந்த பாதுகாப்புத் தரங்கள் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கும், வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காகவும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இனி திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
