டார்வின்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸி வென்றது. இந்நிலையில், டார்வின் நகரில் நேற்று 2வது டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தனர். அந்த அணியின் டெவால்ட் புரூவிஸ் 56 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 8 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 125 ரன் குவித்தார். அதன் பின், 219 ரன் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. துவக்க வீரர்கள் கேப்டன் மிட்செல் மார்ஷ் 22 ரன், டிராவிஸ் ஹெட் 5, கேமரூன் கிரீன் 9 என சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தனர். டிம் டேவிட் மட்டும் அதிரடியாக ஆடி 24 பந்தில் 50 ரன் குவித்தார். பின் வந்தோர் சொதப்பியதால், 17.4 ஓவரில் ஆஸி, 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், 53 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவின் க்வெனா மபாகா 3 விக்கெட் வீழ்த்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக டெவால்ட் புரூவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த போட்டி, வரும் 16ம் தேதி நடக்கவுள்ளது.
