புதுடெல்லி: காங்கிரசின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர் கன்கயா குமார் கூறுகையில், ‘வாக்கு திருட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக.14ல் காங்கிரசார் பேரணி நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை, வாக்கு திருடர்கள், அதிகாரத்தை கைவிடுதல் என்ற கோஷத்துடன் பேரணி நடத்த உள்ளனர். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை, வாக்களிக்கும் உரிமையைக் காப்பாற்றவும், மக்களின் பங்கேற்பை உறுதி செய்யவும் ஒரு கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்படும்’ என்றார்.
