சென்னை: தவெக தலைவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற ராகுல் காந்தி மற்றும் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது’’ என கூறியுள்ளார்.
மற்றொரு அறிக்கையில், ‘‘போராடி வரும் தூய்மைப்பணியாளர்களை நான் நேரில் சந்திக்க சென்றால், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என கருதிய தூய்மைப்பணியாளர்கள், தவெக தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னை சந்தித்தனர். அவர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தவெக உறுதியாகத் துணை நிற்கும்’’ என கூறியுள்ளார்.
