×

திருச்சுழி அருகே 108ல் குவா குவா

திருச்சுழி,டிச. 7: திருச்சுழி அருகே உள்ள உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தில் அய்யனார் மனைவி முத்துலட்சுமி(22). இவர் 9 மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக திருச்சுழி உள்ள  108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பைலட் நாராயணசாமி , அவசர மருத்துவ உதவியாளர் அன்புராஜ் ஆகியோர் முத்துலட்சுமியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வழியில் அவருக்கு அழகான  ஆண்குழந்தை பிறந்ததது. தாயும்,குழந்தையும்  இருவரையும் அழைத்து சென்று அருகில் உள்ள திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் அரசு...