- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரள அரசு
- சென்னை
- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
- பள்ளி கல்வித் துறை
- தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மாணவர் மனசுப் பெட்டித் திட்டத்தை கேரள அரசு தற்போது அந்த மாநிலப் பள்ளிகளில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 32 ஆ்யிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவியரின் குறைகளை அறிவதற்காக மாணவர் மனசுப் பெட்டி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து “ஆசிரியர் மனசு” திட்டமும் செயல்படுத்தப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக மின்னஞ்சலும் அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களின் விருப்பம், ஆலோசனை, கோரிக்கை ஆகியவற்றை கடிதமாக எழுதி மாணவர் மனசு பெட்டியில் செலுத்தும் கடிதத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகளுக்கு நேரில் ஆய்வுக்கு செல்லும் போது முதல் நிகழ்வாக மாணவர் மனசு பெட்டியில் உள்ள கடிதத்தை படித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டு துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், மாணவ மாணவியர் தரப்பில், மாணவர் மனசு பெட்டியில் போடப்படும் கடிதங்கள் மீதும், தலைமை ஆசிரியர்கள் உரிய தீர்வுகண்டு வருகிறார்கள்.
இந்த திட்டம் தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பெரும் சிறப்பு பெற்றுள்ளதை அடுத்து, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மாணவர் மனசு பெட்டி திட்டத்தை தற்போது கேரளா அரசும் “சுரக்ஷா மித்ரம்” என்ற பெயரில் ஒரு திட்டமாக அறிவித்து செயல்படுத்த தொடங்கியுள்ளது.
