மதுரை, ஆக. 9: மதுரை கலெக்டர் பிரவின்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15ம் தேதி சுதந்திர தின கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். எனவே இக்கூட்டங்களில் ஊராட்சியில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

