×

தாய், தந்தை மாயம்: மகன் புகார்

ஈரோடு, ஆக. 9: ஈரோடு மாவட்டம், சென்னிமலை கொளத்துப்பாளையம் எட்டியன்காடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (45). திருமணம் ஆகாதவர். முட்டை வியாபாரி. இவரது தந்தை மோகனசுந்தரம் (75), அம்மா லட்சுமி (65). இவர்கள் வீட்டில் இருந்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி தியாகராஜன், அவரது பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை அவரது பெயருக்கு மாற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து மறுநாள் மோகனசுந்தரம், அவரது மனைவி லட்சுமி இருவரும் மொபட்டில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தியாகராஜன் சென்னிமலை போலீசில் நேற்று அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோகனசுந்தரம் மற்றும் லட்சுமி இருவரையும் தேடி வருகின்றனர்.

 

Tags : Erode ,Thiagarajan ,Ettiankadu ,Kolathupalayam, Chennimalai, Erode district ,Mohanasundaram ,Lakshmi ,
× RELATED மாவட்டத்தில் லேசான மழை