×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசும், ராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலருமான சேதுசீமையின் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசும்-ராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலருமான சேதுசீமையின் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.

இந்நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Ramanathapuram ,Chennai ,Sethusimai Rani Rajeswari Nachiyar ,Tamil Nadu ,DMK ,Anna Arivalayam ,Chennai… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...