- ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி
- Alankulam
- ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- டிபிவி குழுமம்
- ஷீலா
- உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை…
ஆலங்குளம், ஆக.9: ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு டிபிவி குழுமம் சார்பில் கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா மற்றும் மாணவ பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் ஷீலா தலைமை வகித்தார். உணவு ஊட்டமுறை துறைத் தலைவர் சண்முக சுந்தரராஜ் வரவேற்றார். விழாவில் கல்லூரி மாணவ பேரவை தலைவி, செயலாளர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாணவிகள் பொறுப்பேற்று கொண்டனர். விழாவில் டிபிவி குழுமம் சார்பில் மக்கள் நீதி மய்யம் தென்காசி மாவட்ட செயலாளர் கருணாகரராஜா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜா, தவெக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி ஆகியோர் இலவசமாக வழங்கிய 25 விலை உயர்ந்த கம்ப்யூட்டர்கள் மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். பின்னர் அவர் புதிய பேரவை நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி மாநில அமைப்புச் செயலாளர் ராதா, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை தலைவி மருது எஸ்தர் ராணி நன்றி கூறினார்.

