புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராகுல்சிங் உள்ளார். பீகார் கேடரை சேர்ந்த இவர் 1996ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். சிபிஎஸ்இ தலைவராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 11ஆம் தேதி முடிவடைவதை முன்னிட்டு அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு கடந்த 6ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 2025 நவம்பர் 11 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2027 நவம்பர் 11 வரை ராகுல்சிங்கின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
