×

பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நிலையில், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ளார்.

இவர் சென்னை வருவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இல. கணேசன் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

Tags : BJP ,Nagaland ,Governor ,L. Ganesan ,Chennai ,Apollo Hospital ,Aiyaram Vilukku ,Tamil Nadu ,17th Governor ,Manipur ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...